GEMINI FEATURES



GEMINI SCHOOL OF ASTROLOGY

     ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி  குழுவினரின் அன்பு வணக்கங்கள்..!
     ஜோதிடத்துறையில் வானசாஸ்திரம், பராசர ஜோதிடம், ஜாமக்கோள் பிரசன்னம், பிருகு நந்தி நாடி, KP சிஸ்டம், வாஸ்து, நியுமராலஜி போன்றவற்றில் பல ஆண்டுகள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம். இவ்வாராய்ச்சிகளில் பல ஆயிரம் ஜோதிட சிறப்பு விதிகளையும், சரியான கோட்பாடுகளையும் கண்டறிந்து தொகுத்து வருகிறோம். ஜோதிடம், பிரசன்னம்  மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றில் உள்ள முரண்பட்ட விதிகளைத் திருத்தி சீரமைத்து வருகிறோம். 




     பராசர ஜோதிடம், பிரசன்னம், நாடி போன்ற ஜோதிட முறைகளில் நாங்கள் கண்டறிந்த மற்றும் கண்டுபிடித்த பல்வேறு சிறப்பு வாய்ந்த ஜோதிட விதிகளையும் கோட்பாடுகளையும் தொகுத்து அனைவரும் பயனடையும் வகையில் தமிழகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
     குறிப்பாக ஜாமக்கோள் பிரசன்ன ஜோதிடத்திற்கு எளிய, துல்லியமான வடிவமைப்பையும் உயர்ந்த தரத்தையும் புத்துயிரும் ஊட்டி ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி வாயிலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம்.


     ஜோதிட அன்பர்களின் வாக்கு சித்தி மேன்மை பெற மிகச்சிறந்த முறையில் டிகிரி சுத்தமாக சாப்ட்வேர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 
ஜாமக்கோள் ஆரூடம், நாடி, பராசார முறை (திருக்கணிதம்) சாப்ட்வேர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 



     ஜெமினி பதிப்பகம் விரைவில் பல அறிய சிறப்பு வாய்ந்த ஜோதிட நூல்களை தமிழ் மொழியில் வெளியிட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.!

ஆம்..!
இதுவரை தமிழ் மொழியில் இல்லாத ஜோதிட நூல்களான
  1. நாடி ஜோதிட அச்சு
  2. R.G. ராவ் எழுதிய புத்தகங்கள் 
  3. கிருஷ்ணீயம் தமிழில் 
  4. ஜாமக்கோள்
  5. லால் கித்தாப்பு (The Lal Kittab)
  6. R.G. ராவ் எழுதிய நாடி நூல்கள் (அனைத்தும்)
  7. சந்திர கலா நாடி
  8. ப்ரசன்ன மார்க்கம்
  9. ப்ரசன்ன அனுஷ்டான பத்ததி
உள்ளிட்ட பல அற்புத ஜோதிட நூல்கள் தமிழ் மொழியிலேயே முதன்முறையாக ஜெமினி பதிப்பகத்தில் வெளியாக உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


GEMINI LIBRARY

     அனைத்து ஜோதிடர்களும் பயனடையும் வகையில் கோவை மாநகரில் ஜோதிட லைப்ரரியை நிறுவும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது. 
     ஜோதிடர்களின் ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் இங்கு வைக்கப்படவிருக்கிறது.


GEMINI BOOKSTALL
     அனைத்து ஜோதிடர்களும் பயனடையும் வகையில் ஜெமினி விரைவில் புத்தகக்கடை நிறுவப்பட கோவையில் உள்ளது.

     இவ்வாறு அனைத்து வித ஜோதிட சேவைகளையும் ஆத்மார்த்தமாக ஒருங்கே தரும் சேவை நிறுவனமாக ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி திகழ்ந்துவருகிறது.

     உண்மை நிறைந்த எங்கள் உழைப்பின் பயன்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களோடு இணைந்து உயர்வடைய அன்புடன் வரவேற்கும்...
-GEMINI SCHOOL OF ASTROLOGY