Courtesy: Jodhida Arasu
(ஜோதிட அரசு மாத இதழில் வெளியான எங்களது கட்டுரைகளையும் )
ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்க தேவையான அம்சங்கள்:
கிரக காரகத்துவம், பாவ காரகத்துவம், யாம காரகத்துவம், ஆரூடம், உதயம், கவிப்பு, சூரிய வீதி, கோச்சாரம், ராசிக்கதிர்கள், தாது மூல ஜீவன், ராகு காலம், எமகண்ட காலம், கோள்களின் குலம், கோள்களின் வடிவு, கோள்களின் காலநிலை, கிரகச் சேர்க்கை பலன் உள்ளிட்ட அம்சங்கள்.
ஆரூடம்
ஆரூடம் என்பது நிமிடங்களால் கணக்கிடப்படுகிறது.
5 நிமிடத்திற்கு 1 ஆரூடம்
1 மணி நேரத்திற்கு 12 ஆரூடம்
12 ஆரூடத்தில் 12 ராசிகள் வரும்
ஆரூடமே அதீத பலம். ஜாதகம் கேட்க வந்தவர் ஏறி(வந்து) நின்ற நிமிடத்தை ஆரூடம் காட்டும்.
ஆரூடம் 1 ராசியை 5 நிமிடத்தில் கடக்கும்.1 ராசிக்கு 9 பாதம். ஆரூடம் 1 பாதம் கடந்து செல்ல 33 செகண்டு எடுத்துக்கொள்கிறது. பிரசன்னத்தில் ஆரூடம் மிகவும் முக்கியமானவை. ஆரூடத்தை நிர்ணயம் செய்தால்தான் கேள்வியின் பலனை நிர்ணயம் செய்ய முடியும்.
உதாரணம்:
7 மணி 23 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது சிம்ம ஆரூடம்.
3 மணி 19 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது கடக ஆரூடம்.
5 மணி 57 நிமிடத்திற்கு ஒருவர் வந்தால் அது மீன ஆரூடம்.
உதயம்
உதயம் கணிக்க தேவையானவை
அன்றைய தமிழ் தேதி, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்
சூரியன் ஒரு நாளில் 4 நிமிடம் நகர்ந்து செல்கிறது.
4 நிமிடம் என்பது 1 பாகையாகும்.
பகல் உதயம் கணித்தல்
தமிழ் தேதி ஆவணி 5
ஜாதகர் வந்த நேரம்- மதியம் 2 மணி 43 நிமிடம்.
சூரிய அஷ்தமனத்திளிருந்து சூரிய உதயத்தை கழிக்க வேண்டும்.
அன்றைய சூரிய அஸ்தமனம் = 18.35 மணி (ரயில்வே நேரம்)
அன்றைய சூரிய உதயம் = (-) 06.16 மணி (கோவை)
அன்றைய பகல் = 12 .19 மணி
12 மணி 19 நிமிடத்தை மொத்த நிமிடமாக்க
12 x 60 = 720 + 19 = 739 நிமிடம்
739 நிமிடம் 12 ராசிகளுக்கும் உரியதாகும். ஆகவே 1 ராசிக்கு எத்தனை நிமிடம் என கணக்கிட வேண்டும்.
739 / 12 = 61.58 இதை 62 ஆக எடுத்துக்கொள்ளலாம். 62 நிமிடம் பகலில் 1 உதயமாகும்.
அன்றைய தமிழ் தேதி ஆவணி 5. ஒரு நாளிற்கு 2 நிமிடம் வீதம் (சூரியன் பகல் நகர்வு) 5 x 2 = 10.
1 உதயமான 62 நிமிடத்தில் இந்த 10 நிமிடத்தை கழிக்கவும். 62 - 10 = 52
52 நிமிடத்தை சூரிய உதயத்துடன் கூட்ட வேண்டும்.
சூரிய உதயம் = 06.16
00.52
07.08 சிம்ம உதய முடிவு
01.02
08.10 கன்னி உதய முடிவு
01.02
09.12 துலா உதய முடிவு
01.02
10.14 விருச்சிக உதய முடிவு
01.02
11.16 தனுசு உதய முடிவு
01.02
12.18 மகர உதய முடிவு
01.02
13.20 கும்ப உதய முடிவு
01.02
14.22 மீன உதய முடிவு
01.02
15.24 மேஷ உதய முடிவு
ஜாதகம் பார்க்க வந்தவர் மதியம் 2 மணி 43 நிமிடத்திற்கு வந்தார். மதியம் 2 மணி 22 நிமிடம் முதல் 3 மணி 24 நிமிடம் வரை மேஷ உதயமாகும்.
43 நிமிடத்திற்கு தனுசு ஆரூடம் ஆகும்.
எனவே வந்தவர் வந்து நின்றது மேஷ உதயம், தனுசு ஆரூடம்.
சூரிய வீதி
கவிப்பு கண்டுபிடிக்க சூரிய வீதி தேவை. எனவே முதலில் சூரியவீதியை பார்ப்போம்.
சூரியன் வீதியை பார்க்கும் முறை:
சூரியனுக்கு தட்சிணாயனம், உத்தராயணம், பூர்வயணம் என்ற மூன்று வீதிகள் உண்டு. வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி மாதங்கள் சூரிய வீதி மேஷம் எனவும்,
கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் மிதுன வீதியாகவும்,
புரட்டாசி, ஐப்பசி, பங்குனி, சித்திரை மாதங்கள் ரிஷப வீதியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலே உள்ள அட்டவணையில் சூரியன் இருக்கும் ராசியே எந்த வீதியில் சூரியன் உள்ளார் என்பதை காட்டுகிறது.
சூரியன் நிற்பது
மேஷ வீதி எனில் ஆரூடத்திலிருந்து மேஷம் வரை கணக்கிடவும்.
ரிஷப வீதி எனில் ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை கணக்கிடவும்.
மிதுன வீதி எனில் ஆரூடத்திலிருந்து மிதுனம் வரை கணக்கிடவும்.
இனி அடுத்ததாக கவிப்பு கணிக்கும் முறையை பற்றி பார்ப்போம்
உதயத்தால் எதிர்காலம் பற்றியும், ஆரூடத்தல் நஷ்டத்தைப் பற்றியும் கவிப்பால் மைந்திருக்கும் ரகசியத்தை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கவிப்பு என்றால் கவிழ்த்து வைத்தல் அல்லது குடை பிடித்தல் என்று கூறப்படுகிறது. சிலசமயம் மீன் இடிப்பவர்கள் வட்ட வடிவமான ஒரு கூடையை தண்ணீரில் கவிழ்த்து விடுவார்கள். பிறகு மேலேயுள்ள துவாரத்தின் வழியாக கையை விட்டு வேண்டிய (பெரிய) மீன்களை எடுத்துக்கொள்வார்கள். அது போல மறைந்திருக்கும் பல விஷயங்களை கவிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஜாமக்கோல் பிரசன்னத்தில் துல்லியமான பலன் பார்ப்பதற்கு கவிப்பு மிக பிரதானமாக செயல்படுகிறது.
கேள்வியாளரின் கேள்வி நடக்குமா நடக்காதா என்பதை கவிப்பே சொல்லிவிடும்.
கேள்வியாளரின் மனநிலை, சேதாரம், நஷ்டம், மறைந்த பொருள், காணாமல் போனவரின் திசை, தொலைந்த பொருள் இருக்கும் இருப்பிடம் இது போன்ற வியக்க வைக்கும் பல விசயங்களை கவிப்பின் மூலம் அறியலாம்.
முதலில் கோசார சூரியன் எந்த வீதியை காட்டுகிறார் என்று பார்க்கவும்
மேஷ வீதியா, ரிஷப வீதியா, மிதுன வீதியா - எந்த வீதியோ அந்த வீதியை ஆரூடத்திளிருந்து எண்ண வேண்டும். எண்ணி வந்த எண்ணிக்கையை உதயம் முதல் எண்ணி போட வேண்டும்.
(Ex .1 ) 17-10-2009 at 15:47:05 கோவை
புரட்டாசி 31, சனிக்கிழமை.
உதயம்
| |||
ஆருடம்
| |||
கவிப்பு
|
சூரியன்
|
கடக உதயம், மகர ஆரூடம், சூரியன் துலாம் ராசி (ரிஷப வீதியில்)
சூரியன் இருப்பது ரிஷப வீதி ஆகும். ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை எண்ண வேண்டும். ஆரூடத்திலிருந்து ரிஷபம் வரை எண்ணினால் எண்ணிக்கை ஐந்து. உதயத்திளிருது ஐந்தாம் வீடு விருச்சிக ராசி. விருசிகத்தில் கவிப்பு உள்ளது.
தை 4 , சனிக்கிழமை.
கன்னி உதயம், விருச்சிக ஆரூடம், சூரியன் மகர ராசி (மிதுன வீதி). எனவே சூரியன் இருப்பது மிதுன வீதியாகும்.
கவிப்பு
| |||
சூரியன்
| |||
ஆருடம்
|
உதயம்
|
(Ex:3) 17-5-2009 at 07:03:12 கோவை
வைகாசி 3, ஞாயிற்றுக்கிழமை
ஆருடம்
|
சூரியன்
|
உதயம்
கவிப்பு
| |
மிதுன உதயம், மேஷ ஆரூடம், ரிஷப சூரியன் (மேஷ வீதி)
சூரியன் இருக்கும் வீதி மேஷ வீதியாகும். ஆரூடம் மேஷத்தில் இருப்பதால் மேஷம் என்பது ஒன்றாமிடம். ஆகையால் உதயமே கவிப்பாக வரும்.
இப்போது உதய ஆரூடம், கவிப்பு கணிப்பதை பற்றி பார்த்து விட்டோம்.
அடுத்து வருவது, 'யாமகிரகம் அமைக்கும் முறை'.
யாமகிரகம் அமைக்கும் முறை
பூகோள சாஸ்திரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் எட்டு திக்குகள் (திசைகள்) உண்டு. அவை முறையே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற முக்கியமான திசையும் உபதிசைகலான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற உப திசைகளையும் சேர்த்து மொத்தம் எட்டு திக்குகளையும் வைத்து முன்னோர்கள் பலன் சொல்லி வந்தார்கள். ஆகையால் சத்திர ராசியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி சர ராசியுடனும் இன்னொரு பகுதி உபய ராசியுடனும் சேர்த்து பலன் சொல்லி வந்தார்கள்.
ஜாமங்கள் 8, ஜாமக்கோள் கிரகமும் 8, பகல் பொழுது 8 ஜாமம், இரவுப்பொழுது 8 ஜாமம், ஒரு நாளைக்கு 16 ஜாமம்.
ஒரு ஜாமத்திற்கு 1 1/2 மணி நேரம். அந்த 1 1/2 மணி நேரத்தில் 45 பாகையை ஜாமக்கோள் கிரகம் ஒரு ஜாமத்தை கடக்கும். ஸ்திர ராசியில் உள்ள 30 பாகையை சர ராசிக்கு 15 பாகை, உபய ராசிக்கு 15 பாகை எடுத்து பலன் சொல்ல வேண்டும். ஆகையால் ஸ்திர ராசியில் கிரகங்கள் அமராதது போல தெரியும். ஆனால் அது அமரும். அதனுடைய கணித முறையை பலன் சொல்லக்கூடிய பாடத்திட்டத்தில் பார்ப்போம். தற்சமயம் அமராதது போல நினைத்துக்கொள்ளுங்கள்.
ஜாமக்கோள் கிரகங்களின் கிழமை நாதனே மீனத்தில் உதயமாகி anti clock wise -இல் பின்னோக்கி ஒவ்வொரு கிழமை நாதனும் காலை 6:00 மணிக்கு மீனத்தில் உதயமாகி பின்னோக்கி நகரும்.
யாமக்கோள் (ஜாமக்கோள்)
கிரகம் அதன் வரிசை கிரகப் பெயர்:
கதிர் : சூரியன்
சேய் : செவ்வாய்
பொன் : குரு
மால் : புதன்
புகார் : சுக்ரன்
மந்தன் : சனி
மதி : சந்திரன்
பாம்பு : ராகு + கேது
இந்த வரிசையில் கிரகங்கள் பின்னோக்கி நகரும்.
ஒருவர் கேள்வி கேட்கும்போது எந்த நேரத்தில் கேள்வி
கேட்கிறாரோ அந்த நேரத்திற்கு உண்டான ஜாமத்தை முதலில் பார்க்க வேண்டும். அன்றைய
கிழமை நாதன் அந்த ஜாமம் முதல் வரிசைப்படி பின்னோக்கி செல்வார்.
ஜாமக்கிரகம்
அமைக்கும் முறை:
மீள்பார்வை (Revision):
பூகோள
சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் எட்டு திக்குகள் (திசைகள்) உண்டு. அவை
முறையே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற முக்கியமான திசையும் உபதிசைகளான
வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு தென்மேற்கு என்ற உபதிசைகளையும் சேர்த்து மொத்தம்
எட்டு திக்குகளையும் வைத்து முன்னோர்கள் பலன் சொல்லி வந்தார்கள். அஷ்டதிக்கு
நாயகர்களே ஜாமக்கோளின் ஜாம அதிபதியாக வருகிறார்கள். ஆகையால் ஸ்திர ராசியை இரண்டாக
பிரித்து ஒரு பகுதி சர ராசியுடனும் இன்னொரு பகுதி உபய ராசியுடனும் சேர்த்து பலன்
சொல்லி வந்தார்கள்.
ஜாமங்கள் 8, ஜாமக்கோள் கிரகமும் 8. பகல் பொழுது
8 ஜாமம், இரவுப் பொழுது 8 ஜாமம். ஒரு நாளைக்கு 16 ஜாமங்கள்.
ஒரு ஜாமத்திற்கு
1 ½ மணி நேரம். அந்த 1 ½ மணி நேரத்தில் 450 யை ஜாமக்கோள் கிரகம் ஒரு ஜாமத்தைக் கடக்கும்.
அன்றைய கிழமை
நாதன் காலை 6:00 மணிக்கு மீனத்தில் உதயமாகி எதிர் திசையில் பின்னோக்கி நகர்ந்து
மாலை 6:00 மணிக்கு மேஷத்தில் முடிவாகும். இது பகல் 8 ஜாமமாகும். மாலை 6:00 மணிக்கு
மீண்டும் மீனத்தில் உதயமாகி மறுநாள் காலை மேஷத்தில் முடியும். இது இரவு 8
ஜாமமாகும்.
ஜாமக்கோள்
கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காரணம் மற்றும் அவை ஜாம நேரங்களை எடுத்துக்கொள்ளும்
காரணங்களை ஆராய்வோம்.
ஜாமக்கோள்
கிரகம்: கிரக பெயர் - கிழமை
கதிர் : சூரியன் – ஞாயிறு
சேய் : செவ்வாய் – செவ்வாய்
பொன் : குரு – வியாழன்
மால் : புதன் – புதன்
புகர் :
சுக்கிரன் – வெள்ளி
மந்தன் :
சனி – சனி
மதி : சந்திரன் – திங்கள்
பாம்பு : ராகு + கேது = பாம்பு
இந்த வரிசையில் கிரகங்கள் பின்னோக்கி நகரும்.
ஒருவர் கேள்வி கேட்கும்போது எந்த நேரத்தில்
கேள்வி கேட்கிறாரோ அந்த நேரத்திற்கு உண்டான ஜாமத்தை முதலில் பார்க்க வேண்டும்.
அன்றைய கிழமைநாதன் ஜாமம் முதல் வரிசைப்படி பின் நோக்கி செல்வார்.
ஜாமக்கிரக வரிசை
அமைந்த விதம்:
ஒவ்வொரு
கிழமையின் ராகு காலத்தின் வரிசைப்படிதான் கிழமைநாதனை அதிபதியாகக் கொண்டு ஜாம கிரக
வரிசை அமைகிறது.
கிழமை - ராகு நேரம் -
அதிபதி
ஞாயிறு -
04:30 – 06:00 சூரியன்
செவ்வாய் - 03:00
– 04:30 செவ்வாய்
வியாழன் -
01:30 – 03:00 குரு
புதன் -
12:00 – 01:30 புதன்
வெள்ளி -
10:30 – 12:00 சுக்கிரன்
சனி -
09:00 – 10:30 சனி
திங்கள் -
07:00 – 09:00 சந்திரன்
“ பாம்பு <= "
(Chart : 1 )
ஜாமக்கிரகம்
ஒவ்வொன்றும் ராகு காலத்தின் வரிசையில் ராகுவைப்போல பின்னோக்கி செல்கின்றன.
அதாவது,
கௌரி நேரத்தில்
ஒவ்வொரு கிழமைக்கும் பகலில் விஷகாலம் வரும். அந்த விஷ கால நேரத்தை வரிசைப்படுத்தி
அன்றைய கிழமை நாதர்களை ஜாமக்கிரகமாக கொண்டும், இந்த ஜாமக்கிரகங்களுக்கு மூலமாக
ராகு இருப்பதால் ராகு பின்னோக்கி நகர்வதால் இந்த ஜாமக்கிரகங்களை பின்னோக்கியும்
பலன் பார்க்கிறார்கள். இது மேலும் பல ஆராய்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது. ஆய்வு
செய்தால் வியக்கத்தக்க விசயங்கள் வெளிப்படும்.
ஜாம நேரங்கள்:
6:00 – 7:30========1வது ஜாமம்
7:30 – 9:00========2வது ஜாமம்
9:00 - 10:30=======3 வது ஜாமம்
10:30 - 12:00======4 வது ஜாமம்
12:00 – 1:30 ======5 வது ஜாமம்
1:30 – 3:00=======6 வது ஜாமம்
3:00 - 4:30=======7 வது ஜாமம்
4:30 - 6:00=======8 வது ஜாமம்
இந்த 8 ஜாம நேரமும் பகலுக்கும் இரவுக்கும்
பொதுவானது. இந்த ஜாம நேரத்தை ராசிக்கட்டம் (Chart: 2) மூலம் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு
எந்த கிழமையானாலும் பகல் அல்லது இரவு 3:00 மணி முதல் 4:30 மணிக்குள் ஒருவர்
பிரசன்னம் கேட்டால் அந்த ஜாம நேரம் ஏழாவது ஜாமமாகும். மிதுன ராசியில் புனர்பூசம்
3ம் பாதம் முதல் அன்றைய கிழமை நாதன் பின்னோக்கி செல்வார்.
பொதுவாக, காலை
6:00 மணிக்கு அன்றைய கிழமைநாதன் மீனராசியில் ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் முதல்
பின்னோக்கி மீனம், கும்பம், மகரம் முதல் நகர்ந்துகொண்டே மேஷ ராசி வரை 3600 யை
மாலை 6:00 மணிக்குள் கடந்து விடுவார். இது பகல் 8 ஜாமமாகும். மாலை 6:00 மணி முதல்
மறுநாள் காலை 6:00 மணிவரை பகல் பொழுது போலவே மீண்டும் மீன ராசி முதல் மேஷ ராசி வரை
இரவு 8 ஜாமமாகக் கடப்பார்.
ஒரு ஜாமம் 1 ½
மணி நேரமாகும். இந்த 1 ½ மணி நேரத்தில் ஒவ்வொரு ஜாம கிரகமும் தான் இருக்கும்
இடத்திலிருந்து 45o கடக்கும். Chart :2ல் உள்ள 15o என்பது ஒரு ஜாமம் முடிந்து அடுத்த ஜாமம்
தொடங்கும் இடமாகும்.
ஜாமக்கிரகம் ஒரு
ஜாமத்தை 26 நிமிடங்களில் கடக்கும். 1 பாதத்தை 6 நிமிடம் 30 நொடியில் கடக்கும்.
(பாடம் தொடரும்)
பயிற்சிகுறித்த விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்
சூலூர் S.கோபாலகிருஷ்ணன் 9842650908
புஞ்சைபுளியம்பட்டி R.செல்வம் 9842780218
சோமனூர் N. காளிமுத்து 9842233773