Monday, December 6, 2010

ஜாமக்கோள் பிரசன்னம் என்கிற யாமக்கோள் ஆரூடம்

      பூமியின் வெளிபரப்பும் அதன் மேல்படும் கதிர்களையும் ஆராய்ந்து ஜீவராசிக்கும் அண்டவெளிக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானமண்டலத்தில் ராசிமண்டலங்களும் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் இருப்பதை ஆராய்ந்து சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சஞ்சாரம் செய்வதை உணர்ந்தார்கள். நம் முன்னோர்கள் விட்டுசென்ற திதி, யோகம், கரணம், அயனம் போன்ற கால அளவுகளை ஆராய்ந்து சிறந்த ஒரு வான சாஸ்திரத்தை உருவாக்கினார் ஆரியபட்டர்.
     ஆரம்ப காலத்தில் மனிதன் வழிப்போக்கில் சென்று கொண்டிருக்கும்போது எந்த திசையில் இருந்து கேள்வி கேட்கிறார்களோ அந்த திசையையும் அதற்கு எதிர் திசையில் உள்ள சகுனத்தையும் வைத்து பலன் சொல்லி வந்தார்கள் மற்றும் தனக்கு முன்னாள் உதயமாகும் நிமித்தத்தை வைத்தும் பலன் சொல்லி வந்தார்கள்.
     எட்டு திக்குக்குள் எட்டு ஜாமத்தை வைத்து அமைத்து அதனுள் உதயத்தை ஓடவிட்டு உதயத்திலிருந்து சூட்சும ஆரூடத்தை எடுத்து பலன் சொல்லிவந்தார்கள். நிமித்த ஆரூடம், சகுன ஆரூடம், பறவைகள்,  கௌரி,பஞ்ச பட்சி, தொடுகுறி சாஸ்திரம் இது போன்ற பல பிரசன்னங்களையும், யுக்திகளையும் ஆராய்ந்து அரசர்கள் மற்ற நாட்டின் மீது படையெடுத்து செல்லவும் , மற்ற நாட்டினர் எப்போது படையெடுப்பார்கள் என அறியவும் பயன்படுத்தி வந்தார்கள்.
     சங்க காலத்தில் புறநானூறு சிலப்பதிகாரத்தில் பிரசன்னம் இருப்பதையும், சீவக சிந்தாமணியில் பிரசன்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் தெளிவாக பார்க்கிறோம். வடமொழியில் ராவணேஸ்வரன் இயற்றிய ராவண காவியத்தில் ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சினேந்திர மாலையில் பிரசன்னத்தை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
     ஜாமக்கோள் பிரசன்னத்தை பற்றி தேவக்கோட்டையை சேர்ந்த ஜோதிடர்கள் சென்ற நூற்றாண்டில் நுணுக்கமான விஷயங்களை பற்றியும் ஆய்வு நோக்குடன் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள். மேலும், கல்யாணராமையர் , ஜோதிடக்கடல் வைத்தியநாதன், அல்லியேந்தல் அருணாச்சலம், திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் போன்றோர் முறைபடுத்தி ஜாமக்கோள் ப்ரசன்ன நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனைகள் எதுவானாலும் அதை ஆய்வு செய்யகூடிய கணித முறைகள் உண்டு. காணாமல் போனவர், தொலைந்து போன பொருள், தொழிலில் வெற்றி தோல்வி, திருமணத்தை பற்றி, குழந்தையை பற்றி இது போன்ற எந்த கேள்வி அனாலும் நடக்குமா? நடக்காதா? எப்போது நடக்கும்? என்பதை துல்லியமாக கூறமுடியும்.
     நாங்கள் இதுவரை பார்த்த 30,000 க்கும் மேற்பட்ட பிரசன்னங்களின் சாராம்சங்களை ஜோதிட அரசு மாத இதழில் தொடராக எழுதிக்கொண்டு இருக்கிறோம். மேலும் தமிழகத்தில் ஜாமக்கோள் தொடர்பான பயிற்சிகளை சிறப்பாக அளித்துக்கொண்டிருக்கிறோம்.

பயிற்சிகுறித்த விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்
சூலூர் S.கோபாலகிருஷ்ணன் 9842650908
புஞ்சைபுளியம்பட்டி   R.செல்வம் 9842780218
சோமனூர் N. காளிமுத்து 9842233773

Friday, December 3, 2010

GEMINI SCHOOL OF ASTROLOGY- ஒரு இனிய அறிமுகம்


ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி

     ஜோதிடர்களுக்கும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி  குழுவினரின் அன்பு வணக்கங்கள்..!

     ஜோதிடத்துறையில் வானசாஸ்திரம், பராசர ஜோதிடம், ஜாமக்கோள் பிரசன்னம், பிருகு நந்தி நாடி, KP சிஸ்டம், வாஸ்து, நியுமராலஜி போன்றவற்றில் பல ஆண்டுகள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம். இவ்வாராய்ச்சிகளில் பல ஆயிரம் ஜோதிட சிறப்பு விதிகளையும், சரியான கோட்பாடுகளையும் கண்டறிந்து தொகுத்து வருகிறோம். ஜோதிடம், பிரசன்னம்  மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றில் உள்ள முரண்பட்ட விதிகளைத் திருத்தி சீரமைத்து வருகிறோம். 

     பராசர ஜோதிடம், பிரசன்னம், நாடி போன்ற ஜோதிட முறைகளில் நாங்கள் கண்டறிந்த மற்றும் கண்டுபிடித்த பல்வேறு சிறப்பு வாய்ந்த ஜோதிட விதிகளையும் கோட்பாடுகளையும் தொகுத்து அனைவரும் பயனடையும் வகையில் தமிழகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம்.

     குறிப்பாக ஜாமக்கோள் பிரசன்ன ஜோதிடத்திற்கு எளிய, துல்லியமான வடிவமைப்பையும் உயர்ந்த தரத்தையும் புத்துயிரும் ஊட்டி ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி வாயிலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம்.

     மேலும் ஜெமினி சாப்ட்வேர்ஸ், ஜெமினி பதிப்பகம், ஜெமினி லைப்ரரி உள்ளிட்ட ஜோதிட சேவைகளையும்  செய்து வருகிறோம்.

     உண்மை நிறைந்த எங்கள் உழைப்பின் பயன்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களோடு இணைந்து உயர்வடைய அன்புடன் வரவேற்கும்... 
-GEMINI SCHOOL OF ASTROLOGY